பாத்திரத்தை 5 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற சூப்பர் ஐடியா!
தினம் தினம் சமையலறையில் இல்லத்தரசிகளுக்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய வேலை சிங்கிள் இருக்கும் பாத்திரத்தை தேய்ப்பது. சமைத்து முடித்தாலும் சரி, சமையலே செய்யவில்லை என்றாலும் சரி, சிங்கிள் பாத்திரம் விழுந்து கொண்டே தான் இருக்கும்.
தண்ணீர் குடிக்க, காபி குடிக்க, குழந்தைகள் ஸ்னாக்ஸ் சாப்பிட என்று ஏதாவது ஒரு பாத்திரத்தை கொண்டு வந்து சிங்கிள் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த சிங்குக்கு மட்டும் ஒரு நாள் கூட லீவு விட முடியாது. இல்லத்தரசிகளுக்கும் பாத்திரம் தேய்க்க ஒரு நாளைக்கு கூட லீவு கிடையாது. இப்படி தினம் தினம் செய்யக்கூடிய இந்த பாத்திரம் தேய்க்கும் வேலையை சுலபமாக்க இரண்டு எளிமையான வீட்டு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
குறிப்பு 1;
முதலில் ஒரு சில்வர் கிண்ணத்தில் சுடச்சுட ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, அதில் எலுமிச்ச பழச்சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு கிண்ணத்தில் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றிக் கொள்ளுங்கள். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்பான்ஜ் நாரை முதலில் இந்த எலுமிச்சம் பழச்சாறு சேர்த்த சுடு தண்ணீரில் நனைத்து, பிறகு பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தொட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது பாத்திரம் தேய்க்க தொடங்குங்கள். இந்த முறையில் பாத்திரம் தேய்த்தால் சூப்பராக பாத்திரங்கள் எல்லாம் நிமிடத்தில் பளிச் பளிச்சென எண்ணெய் பிசுக்கு நீங்கி சுத்தமாகிவிடும். மீண்டும் நாரில் இருக்கும் லிக்விட் தீர்ந்து போய்விட்டால், நீங்கள் லிக்விடை தொட தேவையில்லை. அந்த சுடுதண்ணீரில் ஒரு முறை உங்களுடைய நாரை முக்கி எடுத்து, மீண்டும் பாத்திரம் தேய்க்க தொடங்க வேண்டும்.
இப்படியே உங்களுடைய பாத்திரத்தை தேய்த்து முடித்து பாருங்கள். பாத்திரங்களை எல்லாம் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். (சுடு தண்ணீரில் எலுமிச்சம் பழம் கலந்து வைத்திருக்கும் லிக்விடுக்கு அத்தனை பவர். அதேசமயம் நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விடும் குறைவாக செலவாகும். இந்த குறிப்புக்கு செம்ம பவர்ங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.)
குறிப்பு 2:
பாத்திரம் தேய்க்க சுலபமாக இருக்க இன்னொரு லிக்விடையும் நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி 2 எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து, எலுமிச்சை பழ தோல்களையும் அதில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சோடா உப்பு 1 ஸ்பூன், கல் உப்பு 1/2 ஸ்பூன், போட்டு இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீரில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 4 டேபிள் ர ஸ்பூன், மட்டும் ஊற்றி கலந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
நம் கையால் தயாரித்த இந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 1/2 லிட்டரை, குறைந்தது இரண்டு வாரத்திற்கு நீடித்து வரும். அதாவது இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கும் குடும்பத்திற்கு தாராளமாக இரண்டு வாரத்திற்கு பாத்திரம் தேய்க்க இந்த லிக்விடே போதும். இந்த லிக்விடை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, இதில் ஸ்பாஞ் நாரைத் தொட்டு தொட்டு பாத்திரம் தேய்த்தால் சுலபமாக பாத்திரத்தில் இருக்கக்கூடிய பிசுபிசுப்பு தன்மை அழுக்கு எல்லாம் நீங்கிவிடும்.
அழுத்தி பாத்திரம் தேய்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
பாத்திரம் தேய்க்கக்கூடிய நேரம் மிச்சமாவதற்கு மேலே சொன்ன இரண்டு எளிய குறிப்புகளையும் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை பின்பற்றிக் கொள்ளலாம். சொல்லப்போனால் இந்த இரண்டு குறிப்புகளும் உங்களுக்கு பணத்தை கூட மிச்சம் படுத்தி குடிக்கும்.