நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றி, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதுவும் இந்த சூரிய பெயர்ச்சியானது நவம்பர் 16 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த ராசியில் சூரியன் டிசம்பர் 16 ஆம் திகதி வரை இருப்பார். சூரியனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

கடின உழைப்புக்கான பலன்
ரிஷபம்: ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, நல்ல மாற்றங்கள் ஏற்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். அதுவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கும் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்: மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தரை சிறப்பாக இருக்கும்.