சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிகாரர்களுக்கு இனி இராஜ வாழ்க்கை
சூர்ய பகவான் இப்போது பூரம் நட்சத்திரத்தில் வீற்றிருக்கிறது. வரும் செப். 13ஆம் திகதி அன்று உத்திரம் நடசத்திரத்தில் பெயர்ச்சி அடைய இருக்கிறது. கிரகங்களின் அரசன் என்றழைக்கப்படும் சூர்ய பகவான் (Sun) நடப்பு செப்டம்பர் மாதத்தில் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார்.
உத்தர நட்சத்திரத்தில் சூர்ய பகவான் பெயர்ச்சி அடைவதால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் எனலாம். இவர்களுக்கு வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை பிறக்கும், எதிர்பாராத பண வரவும் இருக்கும். அந்த நான்கு ராசிகள் மற்றும் அவற்றுக்கான பலன்களை இங்கு காணலாம்.
பலன் பெறும் ராசிகள்
மேஷம் (Aries): சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும். தொழில் வெற்றிப் பாதைக்கு திரும்பி முன்னேற்றம் காணும். இதனால் இந்த காலகட்டத்தில் பணமும், நம்பிக்கையும் உங்களிடம் அதிகரித்து காணப்படும். குடும்ப வாழ்வில் அழுத்தம் குறையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
கடகம் (Cancer): சூர்ய பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமானதாகும். நம்பிக்கை அதிகரிக்கும் என்பதால், பணியிடத்தில் நீங்கள் பல புதிய பொறுப்புகளை பெறவீர்கள். புதிய வழியில் உங்களுக்கு வருமானம் வந்து சேரும். வராமல் இருக்கும் பணமும் வந்து சேரும். காதல் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். தொழிலும் சீராகும். நல்ல செய்தி உங்களை வந்து சேரும்.
சிம்மம் (Leo): சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டுவரும். வேலையிடத்தில் உங்களின் சிறப்பான பணியால் நல்ல பெயரும், அதற்கு தகுந்த பாராட்டும் ஊதியமும் கிடைக்கும் திறனை வளர்த்துக்கொள்ளும் நேரம் இது. தொழில் சார்ந்த நீங்கள் முன்னர் எடுத்த முக்கிய முடிவு தற்போது நல்ல பலனை கொடுக்க வாய்ப்புள்ளது. நிலம், கட்டடம் அல்லது கார் ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
துலாம் (Libra): சூர்ய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மரியாதையை கொண்டு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணி சார்ந்த விஷயங்கள் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும். வேலையிடத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம். வெகு தூரம் பயணம் போக வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.