இரு தலைவர்களில் யாரை மக்கள் தேர்ந்தெடுக்க போகிறார்கள்?
நாட்டில் குறித்த இருவரும் தலைவர்களே. மேலும் இருவரும் வழக்கறிஞர்கள், ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்னொருவர் எம்.ஏ சுமந்திரன் ஆவார்.
இவர்களில் ஒருவர் தனது தந்தை சிங்கள அரசால் சுட்டுக்கொல்லப்பட்டமையால் அரசியலுக்கு வந்தார். இன்னொருவர் மாவை சேனாதிராஜா இ.ரா சம்பந்தன் ஆகியோரின் தனிப்பட்ட வழக்குகள் வாதாடியமைக்காக பின் கதவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்.
ஒருவர் தாயகத்தில் நடந்தது இனப்படுகொலை என்கிறார். இன்னொருவர் நடந்தது போர்க்குற்றம் என்கிறார்.
ஒருவர் ஜக்கிய நாடுகளில் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு முயற்சி செய்கிறார். இன்னொருவர் சிங்கள அரசு கேட்காமலே கால அவகாசம் பெற்றுக் கொடுத்தவர்.
இருவரும் கொழும்பில் வாழ்ந்தாலும் ஒருவர் பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இன்னொருவர் கொழும்பில் அப் பேரினவாதிகளுடன் சேர்ந்து வாழ்வது தான் செய்த பாக்கியம் என்கிறார்.
ஒருவர் பதவி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுடன் மக்களுக்காக போராடுகிறார்.
ஆனால் இன்னொருவர் பதவி இல்லை என்றால் தன் பழைய தொழிலுக்கு சென்று விடுவார். எனவே இதில் யார் தமக்கு தேவை என்பதை மக்கள் தேர்தலில் தீர்மானிக்கட்டும் என குறித்த கருத்தை முகநூலில் தோழர் பாலன் என்பவர் பதிவிட்டுள்ளார்.