காலி முகத்திடல் சம்பவம்; சுமந்திரன் பதிவுக்கு சாட்டையடி!
காலி போராட்டகாரகளை படையின அப்புறப்படுத்திய சம்பவம் தொடபில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது சமூக ஊடகபதிவில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சுமந்திரன் அவர்களே நீங்கள் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் சட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்த ஒரு அரசியல்வாதி என்றும் சொல்லப்படுகிறது. அப்படியான உங்களுக்கு நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்படுவது சட்டவிரோதமானது என்பதும் அது நீதிமன்றை அவமதிக்கும் செயற்பாடு என்பதும் தெரியாமல் இருக்காது.
இன்று அதிகாலை காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தியவர்களை இராணுவம் அகற்றவில்லை. பண்டாரநாயக்க நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள எதிர்ப்பாளர்களை வெளியேறுமாறு நேற்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் அங்கு நிலைகொண்டிருந்தவர்களையே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறுவோருக்கு எவ்வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நீங்கள் அறியாத விடயமல்ல. ஆட்சிகள் மாறியவுடன் எதிர் அணியிலுள்ளவர்களை சிறைகளில் அடைக்கும் நுணுக்கம் தெரிந்த நீங்கள் நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை பற்றித் தெரியாமல் இருக்கமாட்டீர்கள்.
நீங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களோடு நெருங்கிய தொடர்பை வைத்திருப்பவர் என்ற வகையில் அவர்களுக்கு சட்டரீதியான விளக்கங்களைக் கூறி நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகாமல் குறித்த இடங்களை விட்டு வெளியேற ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும்.
அதை நீங்கள் செய்யவில்லை. இப்போது பலவந்தமான முறையில் குறித்த இடத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்படதை உங்கள் டீல் ஒப்பந்தங்கள் மூலமான டலஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் கொண்டுவந்து முடிச்சுப்போட்டு யாரை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்? என சமூகவலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
