கடக ராசிக்குள் நுழைந்த சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 31 வரை கொட்ட போகும் அதிர்ஷ்டம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றுகின்றன.
கிரகங்களின் மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுக்கிரன் ஓகஸ்ட் 7-ம் திகதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்தார்.
சுக்கிரன் ஓகஸ்ட் 31 வரை கடக ராசியில் இருப்பார். ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, செழுமை, அழகு, பேச்சு மற்றும் பிரகாசம் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது.
கடக ராசியில் சுக்கிரன் இருப்பதால், ஓகஸ்ட் 31 வரை சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு ஓகஸ்ட் 31 வரையிலான காலம் பொற்காலமாக பிரகாசிக்கும்.
அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்:
கடக ராசி: கடக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.
இந்த நேரத்தில் வாகனங்கள், சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பொறாமை கொண்ட நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி: கடக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது கன்னி ராசியினருக்கு நல்ல காலத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு இது அனைத்து வகையிலும் பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
துலாம் ராசி : கடகத்தில் உள்ள சுக்கிரன் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இதற்குப் பிறகு செலவும் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம்.
ஆகையால், புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுவது நல்லது. நண்பர் அல்லது அன்புக்குரியவரிடமிருந்து நல்ல செய்தி வரும். சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்.
மீன ராசி : இந்த ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். கடினமான முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இருப்பினும், நீங்கள் இந்த சமயத்தில் எடுக்கும் முடிவுகளால் எதிர்காலத்தில் பல பலன்களை பெறலாம். அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.