மனச்சோர்வு அதிகமா இருக்கா-இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்க!
எமது மனநிலையை சுற்றியுள்ள சூழல் நாம் உண்ணும் உணவு எம்மைச் சுற்றியுள்ள நபர்கள் என பல காரணிகள் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் நாம் இருக்கும் மனநிலையைக்கேற்ப சில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மனச்சோர்வு ஏறபட்டிருக்கும் போது எடுத்துக் கொள்ள கூடாத உணவுகள் சில உள்ளன. சிலர் மனச்சோர்வு அதிகமாக இருக்கும் போது அவர்களை அறியாமல் அதிக உணவை சாப்பிடுவார்கள்.
சில நேரங்களில் குப்பை உணவுகளை விரும்பி சாப்பிடுவதும் கூட உண்டு. மனச்சோர்வு அல்லது கவலையான உணர்வுடன் நீங்கள் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மனச் சோர்வுக்கும் கவலைக்குமிடையிலான தொடர்பு.
2017 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று மிதமான முதல் கடுமையான மனச்சோர்வு உள்ளவர்களின் அறிகுறிகள், ஆலோசித்து 12 வாரங்கள் ஊட்டச்சத்து மேம்படுத்தும் உணவுகளை எடுத்துகொண்ட போது அவை மேம்பட்டதாக கண்டறியப்பட்டது.
இந்த உணவு முறையில் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், இனிப்புகள் மற்றும் நொறுக்குத்தீனிகள் உட்பட வறுத்த உணவுகள் அனைத்தையும் நிறுத்தியது.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட 32% அதிகமான பங்கேற்பாளர்களில் மனச்சோர்வு அறிகுறிகள், மனநிலை மற்றும் பதற்றம் உள்ளிட்டவை மேம்பட்டது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் உணவின் மூலம் மனச்சோர்வின் அறிகுறிகளை நிர்வகிக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும் என்பதை உணரமுடிகிறது.
நீங்கள் மனச்சோர்வு அல்லது கவலையில் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
1. சோடா
சோடா போன்ற இனிப்பு பானங்கள் எந்த ஊட்டச்சத்தும் கொண்டிருக்கவில்லை.
இது மனச்சோர்வுக்கு நேரடி தொடர்பை கொண்டுள்ளன. அதே போன்று டயட் சோடாவும் தவிர்க்க வேண்டியது. இதில் சர்க்கரை இல்லை அதனால் பிரச்சனை இல்லை என்று சொல்ல வேண்டாம்.
ஏனெனில் இது உங்களை மனச்சோர்வடைய செய்யலாம். சர்க்கரை சேர்த்த சோடாவை விட இது சோர்வடைய செய்யலாம்.
பல சோடாக்களில் உள்ள அதிகப்படியான காஃபின் பதட்டத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
2.ப்ரெட்
வெள்ளை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ப்ரெட் வகைகள் பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இது சாப்பிட்ட உடன் உடலில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும். இது ஆற்றல் செயலிழப்புகளை உண்டு செய்யும்.
இதனால் கவலை மற்றும் மனச்சோர்வு மோசமாக இருக்கலாம். நீங்கள் சிற்றுண்டி சாப்பிட விரும்பினால் முழு தானிய ரொட்டிகளை பயன்படுத்தலாம்.
3.கெட்ச் அப்
தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் கெட்ச் அப் என்றாலும் இவை அதிக சர்க்கரை கொண்டது. ஒரு தேக்கரண்டிக்கு நான்கு கிராம் அளவு சர்க்கரை சேர்க்ககூடும்.
மேலும் இதில் செயற்கை இனிப்புகள் இருக்கலாம். இவை கவலை மற்றும் மனச்சோர்வுடன் இணைக்கப்படலாம்.
ஆனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட தக்காளி கெட்ச் அப் பயன்படுத்தலாம். எனினும் இவற்றில் செயற்கை பொருள்களும் அதிக சர்க்கரையும் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும்.
4. காஃபி
காஃபின் உங்களுக்கு நடுக்கத்தையும் பதட்டத்தையும் உண்டு செய்யலாம். இது தூக்கத்தையும் கெடுக்க கூடியது. கவலை அல்லது மனச்சோர்வு குறைய இவை உதவாது.
காஃபின் தொடர்ந்து குடிப்பதன் மூலம் உங்கள் மனச்சோர்வு அதிகரிக்கலாம். இவை உங்களது அறிகுறியை மோசமாக்க நினைத்தால் நீங்கள் உணவில் இருந்து காஃபினை மெதுவாக குறையுங்கள்.
காஃபி அளவாக குடிப்பது உங்களை சோர்விலிருந்து குறைக்க உதவும்.
4. சோயா சாஸ்
பசையம் உணர்திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ரொட்டிகள், நூடுல்ஸ்கள் மற்றும் பேஸ்ட்ரிகளுக்கு கூடுதலாக இது சோயா சாஸ் போன்ற முன்கூட்டியே தயாரிக்கப்படும் உணவுகளிலும் இது உள்ளது.
பசையம் உணர்திறன் இருந்தால் அது கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கலாம். மந்தமாக உணரவைக்கலாம்.
5.மது
மனச்சோர்வும் கவலையும் இருக்கும் போது ஆல்கஹால் குடிப்பது உங்கள் வழக்கத்தில் இருந்தால் அதை இன்றே நிறுத்திவிடுங்கள்.
ஏனெனில் இது குறுகிய கால நிவாரணம் போல் இருக்கும். ஆனால் இவை உங்கள் தூக்க சுழற்சியில் நுழைந்து மனநிலை மாற்றங்கள் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
மருந்துகள் எடுப்பவர்கள் ஆல்கஹால் சேர்க்கும் போது எதிர்மறையான பக்கவிளைவுகளை அனுபவிக்கலாம். மேலும் இது மருந்துகள் வேலை செய்வதிலும் தலையிடலாம்.
கவலை மனச்சோர்வு அறிகுறிகள் இருக்கும் போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், இனிப்புகள், பேஸ்ட்ரிகள் மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருள்கள் ஆகியவற்றை நீங்கள் சேர்க்கும் போது கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
இத்தகைய உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
கவலை அல்லது மனச்சோர்வு இருக்கும் போது நல்ல கார்ப் உணவுகளான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து கொண்டவை. ஒமேகா 3 உள்ள கொட்டைகள், ஆளிவிதைகள், விதைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், மீன். வைட்டமின் டி கொண்டுள்ள மீன், டோஃபு, பால் மற்றும் செலினியம் நிறைந்த முழு தானியங்கள், பீன்ஸ், கடல் உணவுகள் , மெலிந்த இறைச்சி போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்.