துபாய்க்கு வேலைக்கு சென்ற இலங்கைப் பெண் அனுபவித்த துன்பம்
இலங்கையில் இருந்து துபாய்க்கு வேலைக்காக சென்ற தன்னை, முகவர் அமைப்பு ஒன்று ஐந்து மாதங்களாக வலுக்கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது என நாடு திரும்பியுள்ள குமுதினி எதிரிசிங்க என்ற பெண் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(4) மக்கள் பேரவைக்கான இயக்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், என்னை ஐந்து மாதங்களாக முகவர் அமைப்பு ஒன்றில் பலாத்காரமாக தடுத்து வைத்திருந்தனர்.
என்னுடன் இன்னும் இருபது பேரும் கூட தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எமக்கு தேவையான உணவு இருக்கவில்லை. பசியை நீரருந்தி தணித்துக் கொண்டோம்.
நிறைய பேருக்கு பல சித்திரவதைகளையும் தொல்லைகளையும் கொடுத்தார்கள். இதை நான் நேரடியாக கண்டேன் என ஆதங்கத்துடன் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.