புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (22) இரவு திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத வேலைநிறுத்தம் காரணமாக நேற்றிரவு திட்டமிடப்பட்ட இரவு தபால் ரயில் சேவைகள் பல மணிநேரம் தாமதமாகி இடம்பெற்றதாகவும் இதன் காரணமாக பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தொழிற்சங்க நடவடிக்கையை இரவு 09:00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.