மூன்று மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து
எல்பிட்டிய மூன்று மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
எல்பிட்டிய நகரின் மத்தியில் கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கட்டடத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று (23) திடீரெனதாக ஏற்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலின் காரணம்
கட்டடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இது தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய பொலிஸார் எல்பிட்டிய பிரதேச சபை மற்றும் நகரவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்ததுடன் கட்டடம் மற்றும் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்களை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ நீண்ட நேரமாக பரவியதையடுத்து உள்ளுராட்சி மன்றத்தின் தண்ணீர் பௌசரும் இரண்டு அவசர தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.