யாழில் திடீரென பலியான குடும்ப பெண் ; உடற்கூற்று அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
யாழில் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பபெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மூளையில் இரத்தக்கசிவு
குறித்த பெண்ணுக்கு கடந்த 14 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு மூளையில் இரத்த கட்டி உள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 15 ஆம் திகதி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.