தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
தங்கம் விலையானது உலக சந்தையில் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகளவில் ஏற்பட்டுள்ள பணவீக்க அதிகரிப்பே இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகின்றது.
அதேவேளை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது ஜூன் 14 மற்றும் ஜூன்15 திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் டொலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.