அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி திடீர் தீப்பரவல் ; ஒருவர் உயிரிழப்பு
Colombo
Fire
Death
By Vironika
மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் 'C' பகுதியில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் மூன்று பேர் சிக்கிக்கொண்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம்
இவ்வாறு உயிரிழந்தவர் ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொரட்டுவை தீயணைப்புப் பிரிவினர் 2 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தற்போது தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிவாயுக் கசிவே இந்தத் தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US