கோட்டாபயவிற்கு இரண்டு வருடங்களில் இப்படி ஒரு நிலை
ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. எனினும் இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிா்கொள்ளாத விமா்சனத்தை ஜனாதிபதி எதிா்கொண்டுள்ளாா் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஹா்சன ராஜகருணா இன்று நாடாளுமன்றத்தில் தொிவித்தாா்.
இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினா்களின் வீடுகளுக்கு சென்று இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
அரசாங்கம் மேற்கொள்கின்ற செயற்பாடுகளின் போது கொரோனா பரவாது என்றால் ஏன் எதிா்க்கட்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கக்கூடாது என்று அவா் தொிவித்தாா். இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டத்துக்கு பல நீதிமன்றங்கள் இன்று அனுமதியை வழங்கியுள்ளதாகவும் ஹா்சன ராஜகருணா கூறினாா். தொியாதவா்களுக்கு சொல்லிக்கொடுக்கமுடியும்.
எனினும் அவா்களுக்கு மூளையை கொடுக்கமுடியாது என்றும் அவா் குறிப்பிட்டாா்
இதேவேளை அடுத்த தோ்தலில் ”நான்தான் நன்றாக செய்துள்ளேன்” என்ற கூறுகின்றமையை மக்கள் நம்பினால், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரமுடியும்.