பொலிஸ் நிலையம் சென்றவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலை!
பகமுன பொலிஸ் நிலையத்துக்கு சென்ற நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று திருடி சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைத்த தனது மோட்டார் சைக்கிளில், தான் கொண்டு வந்த பையை வைத்து விட்டு , பொலிஸ் நிலையத்துக்கு சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்ன்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பியதும், பணப்பையை எடுத்துக்கொண்டு ஒரு குரங்கு, மரத்தின் மீது ஏறுவதை கண்டுள்ளார்.
அவரது பணப்பையில் 2000 ரூபாய் பணம், ஓட்டுநர் உரிமம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இருந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து , குரங்கிடம் இருந்து பணப்பையை பெற முடியாது போனதால், காணாமல் போன பொருட்கள், ஆவணங்கள் குறித்து, பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.