யாழில் அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டு; பிரதமர் அதிரடி நடவடிக்கை!
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இணைப்பு செயலாளராக கீதநாத் காசிலிங்கம் வடகிழக்குக்காக விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராவும் செயற்படுகின்றார்.
அதேசமயம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுகிறார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு செயற்பாடுகள் தொடர்பாக பல தரப்பு அதிருப்தி வெளியிட்பட்டிருப்பதுடன், முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு பல அபிவிருத்தி பணிகளுக்கு ஒருங்கிணைப்பு குழு தடையாக உள்ளதாகவும் பல தரப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. அதன்படி அண்மையில் வலிதெற்கு பிரதேசசபையிலும் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராதும், அவர்சார் தரப்புக்களினதும் விருப்பு வெறுப்புக்களுக்கமைய மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என பிரதேசசபை உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கான பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம் செய்யப்படவள்ளார் என அறிய முடிகின்றது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து பிரதமர் இந்த நியமனத்தை வழங்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் ,கூறுகின்றன.