பேருந்து வரவில்லை; 8 கிலோ மீற்றர் நடந்துசென்று பரீட்சை எழுதிய மாணவர்கள்!
நாட்டிலேற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் மாணவர்கள் 8 கிலோ மீற்றர் நடந்துசென்று பரீட்சை எழுதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பாறை , தீத்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற பரீட்சை நிலையத்திற்கு சுமார் 8 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாறை கல்வி வலயத்துக்குட்பட்ட தமன்ன பிரிவிலுள்ள, மடவலலந்த வித்தியாலயத்தி பரீட்சை மண்டபம் அமைந்துள்ளது. மிகவும் பின்தங்கிய கிராமமான தீத்த கிராமத்திலிருந்து , நாளாந்தம் காலை 7:15 மற்றும் 8 15 மணிக்கு இரண்டு தனியார் பஸ்கள் அம்பாறை நகரை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும்.
இந்நிலையில் பரீட்சை தினத்திற்கு முதல் நாளும் தீத்த கிராமத்திலிருந்து தனியார் பஸ் சேவைகள் இடம்பெற்றுள்ளன. எனினும், எரிபொருள் விலை 23 ஆம் திகதி இரவு அதிகரித்த காரணத்தால் பரீட்சை தினத்தன்று இந்த பஸ் சேவைகள் இடம்பெறவில்லை.
இதற்கிடையில் சில பெற்றோர் தமது பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள் மூலம் நூலும் கெபே சந்திக்கு அழைத்து வந்துள்ளனர். பலர் நடந்தே வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவ மாணவிகள் பரீட்சை மண்டபத்துக்கு செல்வதற்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் பெற்றோர் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென , கல்வித் திணைக்கள வலய அலுவலக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .