பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம் ; சடலங்களாக மீட்கப்பட்ட மாணவர்கள்
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வாடா தாலுகா அம்பிஸ்தே பகுதியில் அரச பாடசாலை ஒன்றில் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின கிராமங்களை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை நேரத்தில் பாடசாலையில் படித்து வந்த10-ம் வகுப்பு மாணவனும், தபாதி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஒருவரும் மாயமாகி இருந்தனர்.
தீவிர விசாரணை
இதையடுத்து பாடசாலை ஊழியர்கள் மாணவர்களை தேடினர். அப்போது பாடசாலை வளாகத்தில் உள்ள மரத்தில் 2 மாணவர்களும் துணி காயப்போடும் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில், மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.