பாடசாலை வகுப்பறை மின்விசிறியால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
பாடசாலையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (22) ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் மீது மின்விசிறி வீழ்ந்து காயமடைந்துள்ளனர்.
கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாணவனுக்கு கண்ணிலும், மற்றைய மாணவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மின்விசிறி மின் வயரில் சிக்கிய நிலையிலேயே சுழன்றதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் கூறியும் சரி செய்ய எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.