அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கு எதிராக வீதியில் இறங்கிய மாணவர்கள்! ஏற்பட்ட பதற்றம்
அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கு எதிராக கடவத்த ராகம வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்தை பாதிக்கும் லைசியம் மருத்துவப் பட்ட மோசடியை கொண்டு வருகின்ற அரசாங்கத்தின் சூழ்ச்சியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் களனி பல்கலைக்கழக மருத்துவ சங்கத்தால் இன்றைய தினம் (23-03-2023) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ருகுனு மருத்துவ பீடத்தில் நடைபெறும் மாணவர் மீதான அடக்குமுறையை தடுத்து நிறுத்தவும்,
பல்கலைக்கழக மாணவ தலைவர்களான கலும் முதன்நாயக்க மற்றும் தில்சான் ஹர்சன ஆகியோரை விடுவிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.