மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை
நாட்டில் தூக்கமின்மை பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, 63 சதவீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை என சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கட்டாயப்படுத்தி பாலியல் செயல்பாடு
உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசிமானது. 16 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 8.2 சதவீதமானவர்கள் 4 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு குறைவான நேரம் தூக்குகிறார்கள்.
கடந்த 12 மாதங்களில் மாணவர்களுக்கு கடுமையாக வாகன விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அவர்களில் 6.6 சதவீதமானவர்கள் பெண்களும், 16.4 சதவீதமானவர்கள் ஆண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் வன்முறை மற்றும் தற்செயலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை, 47.9 சதவீதமான மாணவர்கள் ஆரிசியர்களால் தாக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் கடந்த 12 மாதங்களில் 6.1 சதவீதமான மாணவர்கள் கட்டாயப்படுத்தி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுப்படுத்தப்படுகின்றனர் எனவும், ஆண்களிடையே இது அதிகளவு பதிவாகியுள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார்.