Perfume நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி
தலவாக்கலைலையில் வாசனை திரவியத்தை (perfume) நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில் உள்ள ஒரு முன்னணி தமிழ்ப் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன் (16) இன்று ஒரு வாசனை திரவியை தனது தோழர்கள் மீது தெளித்துள்ள்ளார்.
இதனையடுத்து மாணவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
6 ஆம் வகுப்பு கள்வி கற்கும் மாணவன் ஒருவன் தலைவலிக்கு பயன்படுத்தப்படும் மருந்தை வாசனை திரவியம் என நினைத்து கொண்டு வந்து தனது வகுப்பு தோழர்கள் மீது தெளித்துள்ளதாக பாடசாலை அதிபர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.