டீல் ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம்!
டீல் ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறையை நிறுத்துவதுடன், கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு கோசங்கள்
அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம், இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது, 3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திற, என கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.
பல பகுதிகளில் இருந்து வருகை தனித்துள்ள மாணவர்கள் மற்றும் பௌத்த தேரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.