பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (03) முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடற்சார் சமூகத்தினரும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.