இலங்கை சாரதிகளுக்கு எதிராக வெளியான கடும் எச்சரிக்கை
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்லும் முயற்சியில், பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக "கொலை முயற்சி" குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஆபத்தான வகையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை
ஆபத்தான உபகரணங்களைப் பொருத்தி, சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைவதால், வாகனப் பரிசோதகர்களிடமிருந்து உத்தியோகபூர்வ தடை உத்தரவுகளைப் பெற்று, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்லும் முயற்சியில், பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக "கொலை முயற்சி" குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.