ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை!
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடுகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

தவறான மற்றும் அவதூறான அறிக்கை
பேரிடர் சூழ்நிலையில் தவறான மற்றும் அவதூறான அறிக்கைகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். சமூக ஊடகங்களில் ஜனாதிபதி மீது மோசமான அவதூறு பரப்பப்படுகிறது.
அவசரகால சட்டத்தின் கீழ் பொறுப்பானவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அவசரகால விதிமுறைகள் அனர்த்த சூழ்நிலைகளுக்கு மட்டுமேயானது என்றும், வேறு எந்த விடயங்களுக்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.