இளமையில் மன அழுத்தம் ; என்னென்ன நோய்களை ஏற்படுத்தும் தெரியுமா?
20களில் பலர் மன அழுத்தில் இருக்க காரணம், அவர்கள் அவர்களே கண்டுகொள்வதும், உறவுகளை உருவாக்குவதும்தான் காரணம். அது மட்டுமல்ல, வேலை மற்றும் தொழில் குறித்து கவலைகள் வரும்.
குடும்பத்தை விட்டு தள்ளியிருக்க வேண்டும் என்கிற எண்ணம், இந்த உலகில் நமக்கென்று என்ன இடம் இருக்கிறது? என்பது போன்று பல்வேறு குழப்பங்கள் மனதில் தாேன்றும். எனவே, இளமை காலத்தில் அனைவருக்கும் மன அழுத்தம் என்ற ஒன்று வருவது இயல்புதான்.
முதுமையில் என்ன பிரச்சினை வரும்?
உணர்ச்சி சோர்வு: இளமையில் எப்போதும் உணர்ச்சி பெருக்குடன், ஏதோ ஒன்றை யோசித்து மனக்குமுறலுடன் இருந்தால், வயதான பின்பு, உணர்ச்சி சோர்வு ஏற்படலாம். காரணமே இல்லாமல், சோர்வாக உணர்வீர்கள். மகிழ்ச்சி, சோகம் என அனைத்து உணர்ச்சிகளும் ஏதோ பெரியதாக தோன்றும்.
தனிமை உணர்வு: இளமையில் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்வோம். ஆனால், வயதான பின்பு, யாரையும் நம்ப முடியாத நிலைக்கு சென்று விடுவோம். இதனால் தனிமை நம்மை வாட்டலாம்.
டிமன்சியா: நாள்பட்ட மன அழுத்தம், நமது மூளையை பாதிக்கலாம். இதனால், ஹிப்போகேம்பஸ் என்கிற நமது நினைவுகளை ஸ்டோர் செய்யும் மண்டலம் பலவீனம் ஆகலாம். இதனால், டிமன்சியா எனப்படும் மறதி நோய் முதுமையில் வரலாம்.
உடல் ரீதியான மாற்றங்கள்
இதய நோய்: இளமையில் அதிக நாட்கள் மன அழுத்தத்தில் இருந்தோமேயானால், நமக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தங்களின் உணர்வுகளை வெளியில் கூறாதவர்கள், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
ஹார்மோன் குறைபாடுகள்: இளமையில் நாம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், பிற்காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளதாம். குறிப்பாக பெண்களுக்கு தைராய்டு நோய் வர வாய்ப்புள்ளதாம்.
மாதவிடாய் குறைப்பாடு, வெகு விரைவிலேயே மாதவிடாய் நிறுத்தம் உள்ளிட்டவை நடைபெறுமாம். தலைவலி, தூக்கமின்மை, அசிடிட்டி, அல்சர், உடல் வலி உள்ளிட்டவை இப்படி வரும் நோய்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கு தீர்வு என்ன?
மனநல ஆலோசனை/ஜர்னல்: மன வலிகளை ஒரு ஜர்னலில் எழுதலாம். மனநல ஆலோசகரிடம் மனம் விட்டு பேசலாம். இது, உங்கள் மூளை இத்தனை ஆண்டுகளாக ஒரு விஷயத்தை எப்படி நினைத்து கொண்டிருந்தீர்களோ, அதை வேறு மாதிரியாக யோசிக்க வைக்கும்.
உணர்ச்சிகள்: அழுவதற்கு, கோபப்படுவதற்கு, மகிழ்ச்சியாக இருப்பதற்கு என உங்கள் உணர்ச்சிகளை மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும்.
உடல் அசைவுகள்: யோகாசனம், நடனம் ஆடுவது, வாக்கிங் செய்வது உள்ளிட்டவை உங்கள் உடலில் நீங்கள் தேக்கி வைத்திருக்கும் அனைத்து உணர்ச்சிகளையும் ரிலீஸ் செய்ய உதவும். இவற்றை தாண்டி, நல்ல உறவுகள், கலை ஆகியவையும் ஒரு வகையில் உதவும்.