நாற்றமடிக்கும் கிளிநொச்சி நகர்; நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் மலசலகூடத்தின் கழிவு நீர் வெளி இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த 28.03.2023 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பொறுப்பற்ற பயன்பாடு
மலசல கூடம்,குளியலறை என பல வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையம், திறக்கப்பட்டு ஐந்து மாதங்களில் முகம் சுழிக்குமளவுக்கு மாறிவிட்டது.
அங்கு வரும் சில பயணிகளின் பொறுப்பற்ற பயன்பாடு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மலசல கூடத்தின் கழிவு நீர் பயணிகள் பயன்படுத்தும் பாதைகளிலும் அவர்கள் பயன்படுத்தும் இடங்களிலும் வெளியேறியும் காணப்படுகின்றது. அதோடு , மலசல கூடங்கள் முறையான பராமரிப்பு இன்மையாலும் அவை சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.