ஒரு மாதத்துக்குள் 130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்க நடவடிக்கை
130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
அச்சிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக 130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் நிலுவையில் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சேவைகளை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் நோக்கம்
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சேவைகளை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, இணையவழி ஊடாக செயற்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோரினால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
மேலும் வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு இன்று (4)கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.