யாழில் வீதியால் சென்ற மாணவனிடம் கொள்ளையர்கள் அட்டகாசம்!
யாழில் வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து மாணவனை அச்சுறுத்தி அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் யாழ்.சின்னக்கடை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ்.நாவற்குழி - ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன் யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்தற்கு வந்துள்ளார்.
இதன்போது சின்னக்கடை பகுதியில் மாணவனை வழிமறித்த வழிப்பறி கொள்ளை கும்பல், கஞ்சா இருப்பதாக கூறி மாணவனை அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் சோதனை செய்வதாக கூறி மாணவனிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய்
பணத்தை பறித்த கொள்ளயர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.