அறிவிப்பை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த அறிவிப்பை இன்று செவ்வாய்கிழமை (05-04-2022) நிராகரிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தரப்புடன் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்றில் வைத்து அறிவிக்கப்பட்டது.
குறித்த 16 பேரில் உள்ளடக்கப்பட்டதாக கூறப்பட்ட கயேஷான் நவநந்த, இந்த அறிவிப்பை நிராகரிப்பு செய்தார்.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அனுரபிரியதர்ஷன யாப்பா பெயர் பட்டியல் ஒன்றை நாடாளுமன்றில் இன்று வாசித்தார்.
இருப்பினும், அந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக்க பெர்னாண்டோவும், ரொஷான் ரணசிங்கவும் இந்த அறிவிப்பை நிராகரிப்பு செய்துள்ளனர்.
இதன்படி, இன்று சுயாதீனமாக செயற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 இல் இருந்து 39ஆக குறைவடைந்துள்ளது.