புகையிரதப் பாலம் சேதம் ; விரைவில் சீர்செய்து தருமாறு மக்கள் கோரிக்கை !
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’புயல் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டம்-பத்துளுஓயா,புளிச்சாக்குளம் புகையிரதப்பாதை சேதமடைந்துள்ளது.
குறித்த புகையிரத பாலம் 1880ம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தினால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த புகையிரதப்பாலமானது கிட்டத்தட்ட 145 வருடங்கள் பழமையானதாகக்காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து வரும் புகையிரதமானது புத்தளம் வரை இந்த வழியாகவே பிரயாணிகளை ஏற்றிச்செல்வதுண்டு .
அன்றாடம் கொழும்பு வரை அரசாங்க வேலைகளுக்குச் செல்லும் பணியாளர்கள்,மற்றும் சாதாரண பிரயாணத்தை மேற்கொள்ளும் மக்கள் இதன் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆகையால் இந்தப் பாலத்தை விரைவில் சீர்செய்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.