அரச வாகனம் வேண்டும் ; அடம்பிடிக்கும் சாமர சம்பத் தஸநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்படுமானால் அதனை நிராகரிக்கப்போவதில்லை என சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை. மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வாகனம் வழங்கப்பட்டால் நிராகரிக்கமாட்டேன்
எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம் எனவும் சாமர சம்பத் எம்.பி. குறிப்பிட்டார்.
அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். அரசாங்கம் தவறிழைக்கும்பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு உள்ளது.
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் சுதந்திரக்கட்சியாக நாம் களமிறங்குவோம் எனவும் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.