திருகோணமலையில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா ; திறந்துவைத்தார் நிர்மலா சீதாராமன்!
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் (State bank of india) திருகோணமலைக் கிளையை‘ இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உட்பட பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.
வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமன் அவர்கள் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.
இதனைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினர் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை கிழக்கிலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோணேஸ்வரரையும் தரிசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.