18ஆவது ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
18ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இன்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விசேட நிர்வாகக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட அதன் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் விளையாடும் என இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 18 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மகளிருக்கான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் குறித்த காலப்பகுதியில் நடத்துவதுவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான அறிவிப்புகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா குறிப்பிட்டுள்ளார்.