கொழும்பில் அந்தோனியாரின் வருகையில் ஏற்பட்ட மத நல்லிணக்கம்! (Video)
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிற்று ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர ஆலயத்திலிருந்து பூஜை தட்டு வழங்கப்பட்டது.
கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா நேற்றையதினம் (13.06.2023) இடம்பெற்றது.
நவநாள் விசேட திருப்பலிகள்
கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள், நவநாள் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு நேற்றைய தினம் சிறப்பு திருவிழா திருப்பலிகள் நடைபெற்றது.
இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இன மதபேதமின்றி இலங்கையர்கள் எனும் சிந்தனையோடு மக்கள் பூஜையில் திரண்டிருந்தனர்.
இந்நிலையில் வீதியுலா வந்த புனித அந்தோணியாருக்கு பொன்னம்பலவாணேஸ்வர ஆலயத்திலிருந்து புனித அந்தோணியாருக்கு பூஜை தட்டு வழஙக்கப்பட்டமையானது மத நால்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக அமைந்த்துள்ளது.