கடனுதவி பெற இந்தியா வருகை தரும் இலங்கை நிதி அமைச்சர்
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், இந்தியாவுடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பசில் ராஜபக்ச, மத்திய அரசுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது, நாட்டின் எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு நிதியளிக்க எதிர்பார்க்கப்படும் 1 பில்லியன் டொலர் கடனைப் பற்றி ராஜபக்சே விவாதிப்பார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.பசில் ராஜபக்ச ஜெய்சங்கருடன் பேசினார்.
அதில், இலங்கைப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தார். கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தனது பொருளாதாரத்தை மீட்பதற்கு இலங்கை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவியை நாடவுள்ளதாக இலங்கை ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வரும் நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் 1 பில்லியன் டாலர் கடனுதவி கோரும் ஆவணத்தில் கையெழுத்திட இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.