ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தக விமான சேவைக்கு சான்றிதழ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தக விமான சேவைக்கு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து (IATA) லித்தியம் பேட்டரிகள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகள் சான்றிதழை பெற்ற தெற்காசியாவின் முதல் வர்த்தக விமான சேவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் சமிந்த பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில்,
லித்தியம் பேட்டரிகள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தக விமான சேவையின் மைல்கல்லாக இந்த சான்றிதழ் அமைகிறது. மின்சார வர்த்தகத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக இது உள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தக விமான சேவையின் நம்பகத்தன்மையை இந்த சான்றிதழ் எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா முழுவதுமான ஏற்றுமதிகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தக விமான சேவை மேற்கொண்டு வருகிறது.
லித்தியம் பேட்டரி போக்குவரத்தில் சிறந்து விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வர்த்தக விமான சேவை காணப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்கிறது.
லித்தியம் பேட்டரிகள் என்பது குறைந்த எடையும் அதிக ஆற்றலையும் கொண்ட ஒரு மின்கலன் ஆகும். இது விமானப் போக்குவரத்தில் இடம்பெறும் செயல்பாட்டுத் தடைகளை நீக்குகிறது. மேலும் லித்தியம் பேட்டரிகள் பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்தை உறுதி செய்கிறது.