இலங்கை ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய புள்ளி! (Video)
இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றனர்.
அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன் போட்டியிடுகின்றார்.
எனினும் சுமந்திரன்போன்ற சிலர் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காது, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக கூறியதோடு தனது விருப்பமே மக்களின் விருப்பம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான திரு கந்தையா - பாஸ்கரன் அவர்கள் , சுமதிரனின் விருப்பம் மக்களின் விருப்பம் அல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளார்.
அதோடு தமிழ் பொது வேட்பாளரையே தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.