ஹரின் எம்.பியால் ஏற்பட்ட சர்ச்சை: நாடாளுமன்றத்தில் விபரீதமாக நடந்தால் என்ன செய்வது?
நாடாளுமன்ற வரலாற்றில் வெடிகுண்டு வீசப்பட்டதை நாம் அறிவோம். தற்போது டோர்ச் அல்ல பிரச்சனை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நான் இக் கவலையான யோசனை கொண்டு வரும் நேரத்தில் தனிப்பட்ட விடயங்களை பேச நான் விரும்பவில்லை. இருந்தாலும் இங்கு டோர்ச் அல்ல பிரச்சனை.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் (Harin Fernando) பையில் டோர்ச் இருந்ததாகவும், அது அவரது தனிப்பட்ட உடமைகள் என பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவித்து கொண்டு வந்ததாகவும் பொலிஸார் எனக்கு தெளிவுபடுத்தினர்.
அத்துடன், ஹரின் பெர்னாண்டோ, நாணயக்கார மீண்டும் வெளியே சென்று பொதி ஒன்றை எடுத்து வந்துள்ளனர். எடுக்க வேண்டாம் என சொன்ன போதிலும் வலுக்கட்டாயமாக எடுத்துச் வந்துள்ளனர். இரண்டாவது முறையாகவும் வலுக்கட்டாயமாக பொதியை எடுத்து வந்தது தவறு.
இருப்பினும், இந்த நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதை நாம் அறிவோம். சோறு பொதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட சம்பவங்களும் இந்த நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளன.
கத்தியுடன் வந்து பிரசன்ன ரணவீரவின் கழுத்தில் வீசியுள்ளனர் . இவை அனைத்தும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
எனவே, இங்கு பலர் சமூகமளிக்கின்றனர், எதாவது விபரீதமாக நடந்தால் என்ன செய்வது?
ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.