உள்ளூராட்சி தேர்தலில் தேர்வான அரச அதிகாரிகளுக்கு சம்பளமற்ற விடுமுறை!
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்/உப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளார்.
அதற்கமைய 2021.06.25ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 12/2021 இன் ஏற்பாடுகளுக்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்/உப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு மாதமொன்றுக்கு 06 நாட்கள் சம்பளத்துடன் கூடியதான விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

06 நாட்கள் சம்பளத்துடன் கூடியதான விடுமுறை
ஆயினும், குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கும், அதுசார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டுள்ள கடமை விடுமுறைக்காலம் போதாமையாக இருப்பின், அவ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதென நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையிலும் மற்றும் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்/உப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் தாபனவிதிக் கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்து சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.