கிலோ மீற்றர் கணக்கில் நீண்ட வரிசை: அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி
இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் கிடைக்காமல் திரும்பி செல்லும் அவல நிலை நீடித்த வண்ணம் உள்ளது.
வெளிநாடுகளிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஒரே ஒரு கப்பலை வாங்குவதற்கு கூட பணத்தை திரட்டமுடியாத நிலையில் இலங்கையில் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பல கிலோ மீற்றர் கணக்கில் நீண்ட வரிசையில் நிற்க்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Suffering of Sri Lankan public continues : Massive queues for fuel and Gas in many areas in the country pic.twitter.com/SzlaFxBtx5
— NewsWire ?? (@NewsWireLK) May 18, 2022