இலங்கையில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட காரணம் இதுதான்..
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வாத காரணத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை வெளியிட்டுள்ளது.
நாட்டில் சமீப காலமாக பதிவாகும் சிறு நிலநடுக்கங்களின் பெரும்பாலானவை மத்திய மலைநாட்டில் கட்டப்பட்டுள்ள பாரிய நீர்த்தேக்கங்களால் ஏற்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல பகுதிகளின் உட்புறத்தில் பல விரிசல்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் நாட்டில் அடிக்கடி பதிவாகினாலும், பூகம்பங்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன.
இருப்பினும், இதுபோன்ற பல்வேறு நிலநடுக்கங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.