வன்புணர்வு குற்றச்சாட்டில் வேட்பாளர் கைது
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாநகர சபைக்கு போட்டியிடும் ஒருவர் வன்புணர்வு குற்றச்சாட்ட்டில் கைதாலியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு
கைது செய்யப்பட்ட நபர் ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் ஹம்பாந்தோட்டை பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபர் இன்று (09) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.