நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்தது
உலக மக்கள் அனைவர்க்கும் அந்தந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனா நோய்க்கான மூன்றாவது தடுப்பூசியினை இலங்கை அரசானது மக்களுக்கு செலுத்தி வருகிறது. நாட்டில் மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்று கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,942 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதவிர, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 32 ஆயிரத்து 188 பேர் கொவிட்-19 முதலாவது தடுப்பூசிகளையும், ஒரு கோடியே 37 இலட்சத்து 49 ஆயிரத்து 891 பேர் இரண்டாவது தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் 65,285 பேருக்கு பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை 851 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 956 பெரும் பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.