இலங்கையர்களுக்கு இந்திய மீனவர்கள் செய்த மோசமான செயல்
நெடுந்தீவு மீனவர்கள் மீன்பிடிக்காக நெடுந்தீவு கடல் பகுதியில் தமது வலைகளை விரித்து காத்திருந்த போது, நெடுந்தீவு கடற்பரப்பினுள் பல படகுகளில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால் கடலுக்கு தாம் செல்லாத நிலையில் வாழ்வாதரத்திற்காக பெரும் இடர்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது காலநிலை சீரடைந்ததால், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் எமது பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கியுள்ளனர்.

மீனவர்கள் கோரிக்கை
கடந்த சில நாட்களாக வருமானமின்றி பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டு வந்த நிலையில் தற்போது எமது வலைகளை அறுத்து சென்றமையால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதுடன், நெடுந்தீவுக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் அத்துமீறலகளை கட்டுப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.