ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்திய இலங்கையர்கள்!
இந்தியாவில் ,ஆசனவாயில் வைத்து தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை பிரஜைகள் கடந்த சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து தங்கம் கடத்தல்
கைதான மூவரும் கொழும்பில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் சுங்க அதிகாரிகளால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆசனவாயிலில் தூள் போன்ற பொருட்களுடன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இலங்கையர்களிடம் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் என்பதுடன் இதன் மொத்த இலங்கை மதிப்பு 42,528,927 ரூபாய் (11,900,000 இந்திய மதிப்பு) எனவும் கூறப்படுகின்றது.