இந்தியாவில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய இலங்கையர்கள்!
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர், மண்டபம் கடற்பரப்பில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, இலங்கை பகுதியில் இருந்து பயணித்த நாட்டுப் படகு ஒன்றை அவதானித்த நிலையில், அதனை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த படகில் பயணித்த இருவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இலங்கையில் 14 கோடி ரூபா மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்றமை கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், படகையும் பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர், இரண்டு சந்தேகநபர்களையும் கைதுசெய்து, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.