ஐக்கிய அரபு நாடுகள் தொடர்பில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை; இனியாரும் செல்ல முடியாது
ஓமான், டுபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் தொழில் வாய்ப்புக்கு செல்வதற்கு தடை விதிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.
சுற்றுலா விசா
சுற்றுலா விசா மூலம், இலங்கையிலிருந்து ஓமானுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக அழைத்து செல்லப்பட்ட பெண்கள், அங்கு விபசாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.