ஓமானில் தூதரக அதிகாரிகளால் இலங்கைபெண்கள் துஸ்பிரயோகம்!(Video)
வீட்டுப்பணிப்பெண்களாக சென்று ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லமொன்றில் உளஉடல் பாதிப்புகளை எதிர்கொண்ட 90பெண்கள் தங்கியுள்ளனர்.
அந்த தங்குமிடம் ஒரு பெண்ணிற்கான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை. இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களில் சிலர் ஏலத்தில் விற்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் எதிர்கொண்ட மோசமானஅனுபவம் காரணமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் துயரமளிக்கும் விதத்தில் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் தங்குமிடத்திலும் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்...